நியூயார்க் வீதியில் உப்பு மூட்டை தூக்கிய பிரியங்கா சோப்ரா! வைரலாகும் வீடியோ!
Actress priyanka chopra with nik jones sister at new york
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார். இவரது பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.
இந்நிலையில் பிரியங்காவும், பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸும், இந்த வருடத் தொடக்கத்திலிருந்து காதலித்து வருவதாகக் கிசுகிசு வெளியாகிவந்தது. இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 11 வயது சிறியவர். ஒருவழியாக அணைத்து விமர்சனங்களையும் கடந்து சில நாட்களுக்கு முன்பு இவர்களது நியாசத்தார்த்தம் முடிந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்சிற்காக, நிக் ஜோன்ஸ்சின் சகோதரியை நியூ யார்க் வீதியில் உப்பு மூட்டை ஏற்றி கொண்டு நடந்துள்ளார். அந்த வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.