பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் இரங்கல்!
நடிகை ராய் லட்சுமியின் தந்தை உயிரிழந்த நிலையில் அவர் கண்ணீருடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் விக்ராந்துக்கு ஜோடியாக கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ராய்லட்சுமி அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ராய் லட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் லட்சுமி தனது தந்தை உயிரிழந்த நிலையில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பா நான் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன். என்னால் இந்த இழப்பிலிருந்து எப்போதும் மீண்டு வரமுடியாது. ஆனால் இந்த இழப்புடன் வாழக் கற்றுக் கொள்வேன்.
உங்களைப் போல என்னை யாராலும் நேசிக்க இயலாது. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் உங்களைக் காப்பாற்ற இயலவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல நீங்கள் என்னோடு இருந்திருக்க வேண்டும்.
எப்போதும் எங்களைச் சுற்றித் தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.