ரொம்ப மோசம்.. அந்த மாதிரி படங்களில் நான் எப்பவும் நடிக்கமாட்டேன்.! வாய்ப்புகளை தூக்கியெறியும் நடிகை ராதிகா ஆப்தே.!
ரொம்ப மோசம்.. அந்த மாதிரி படங்களில் நான் எப்பவும் நடிக்கமாட்டேன்.! வாய்ப்புகளை தூக்கியெறியும் நடிகை ராதிகா ஆப்தே.!
தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.
அவர் மலையாளம், பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். நடிகை ராதிகா ஆப்தே பல படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனக்கு அடல்ட் காமெடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருவதாகவும், அதனை தான் நிராகரிப்பது குறித்தும் அண்மையில் பேட்டியில் கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே கூறியதாவது, வருண் தவாணின் பத்லாபூர் படத்தில் நடித்தபிறகு எனக்கு 18+ காமெடி படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக வருகிறது. அவ்வாறு தற்போது எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களை மரியாதையின்றி நடத்தும் விதமாகவும் உள்ளது. மேலும் இதில் பெண்களை ஆபாசபொருளாகவே பார்க்கின்றனர். இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த மாதிரி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பதாக அவர் கூறியுள்ளார்.