திருப்பதி கோவிலில் ராதிகா செய்த செயலால் மனவருத்தமடைந்த ரசிகர்..
திருப்பதி கோவிலில் ராதிகா செய்த செயலால் மனவருத்தமடைந்த ரசிகர்..
மறைந்த பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவிமான நடிகை ராதிகா அவர்கள் 1978 ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பின் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் திரைப்படங்ககளில் நடித்தார்.
நடிகை ராதிகா தனது நடிப்பு திறமையின் மூலம் ஒரு தேசிய விருது மற்றும் ஆறு ஃபிலிம் பேர் விருதுகள் மூன்று தமிழ் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் துணைத் தலைவராகவும் தொடர்கிறார். 70களில் இறுதியில் இருந்து 1980 வரை மிகப் பிரபலமான நடிகையாக சினிமாவில் இருந்து வருகிறார்.
மேலும் வெள்ளிதிரையிலிருந்து சின்னதிரையிலும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் நடித்த சித்தி சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமானதாகும். தற்போது அரசியலிலும், சினிமாவிலும் பிஸியாக உள்ளார்.
இது போன்ற சூழலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமீபத்தில் தரிசனம் மேற்கொள்ள சென்ற போது, இவரது ரசிகை ஒருவர் இவருடன் நெருக்கமாக போட்டோ எடுக்க முயன்று உள்ளார். அதைப் பார்த்து இவரது பாதுகாவலர்கள் தொடாதீர்கள் தொடாதீர்கள் என கூறி உள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.