இவருமா.. சன் டிவியின் பிரபல சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! செம ஷாக்கில் ரசிகர்கள்!"
இவருமா.. சன் டிவியின் பிரபல சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! செம ஷாக்கில் ரசிகர்கள்!
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் காலை தொடங்கி இரவு வரை மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பூவே உனக்காக.
இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. அவர் தற்போது பூவே உனக்காக தொடரில் இருந்து விலகவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், கனத்த இதயத்தோடு பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுவதை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த சன் டிவிக்கும், புரொடக்ஷன் நிறுவனத்திற்கும் நன்றி.
என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிகளில் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என்னுடன் இருப்பீர்கள் என எனக்கு தெரியும்! உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்! இப்படிக்கு, பூவரசி என பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இத்தொடரில் பூவரசியின் தோழியாக நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா தொடரில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த அருண் விலகி அவருக்கு பதிலாக தற்போது அசீம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.