கடற்கரையில் நீச்சல் உடையில் ரைசா வில்சன்.. வைரல் புகைப்படங்கள்!
கடற்கரையில் நீச்சல் உடையில் ரைசா வில்சன்.. வைரல் புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ரைசா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் தனது சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுடன் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ரைசா 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக்கேத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.