ஓ..!! இவங்கதான் லேடி ஸ்பைடர்மேனா..! நடிகை ரைசாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்கும் நெட்டிசன்கள்!!
நடிகை ரைசா வில்சன் மொட்டை மாடி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரைசா வில்சன் மொட்டை மாடி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியில் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் பிக்பாஸ் மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. மேலும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ரைசா. இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.
சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் மொட்டை மாடியில் டைட்டான உடை அணிந்து தரையில் கைவைத்தபடி எதையோ உத்து பார்க்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் மனுசுல ஸ்பைடர் மேன்னு நினைப்பு, லோ பட்ஜெட் பிளாக் விடோ, மார்வெல் மூவி ஸ்டில் என பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...