வறுமையால் சாலையோரத்தில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த சினிமா இயக்குனர்! ஓடிவந்து உதவிய பிரபல நடிகை! குவியும் பாராட்டுக்கள்!
Actress rajasri deshpande helped director munna hussain
கொரோனா பாதிப்பால் நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் பலவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றது. இவ்வாறு தொண்டு நிறுவனம் ஒன்று சாலையோரங்களில் வசித்துவரும் மக்களுக்கு உதவி செய்துவந்த நிலையில், மும்பை சாலையோரத்தில் வறுமையால் வசித்துவந்த இயக்குனர் முன்னா ஹுசைனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேவிடம் கூறியுள்ளனர்.
பிரபல இந்தி நடிகையான ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ, உட்பட பல படங்கலில் நடித்துள்ளார். மேலும் செக்ஸி துர்கா, ஹராம் போன்ற மலையாளப் படங்களிலும், ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் இயக்குனர்
முன்னா ஹூசைன் 1982-ல் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். இவர் பல பாலிவுட் படங்களுக்கு புரொடக்ஷன் அசிஸ்டென்டாக பணியாற்றியுள்ளார்.
பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது மொத்த சேமிப்பான 30 லட்சத்தை கொண்டு படம் ஒன்றை இயக்கி தயாரித்தார். அது தோல்வியில் முடிந்தநிலையில் தனது குடும்பத்தை இழந்து, கடந்த 15 ஆண்டுகளாக பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோ அருகில் நடைபாதையில் வசித்து, வறுமையில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் குறித்து தகவலறிந்த நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே , இயக்குனர் முன்னா ஹூசைனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், அவருக்கு கேட்கும் திறன் இல்லை. பக்கவாதமும் தாக்கியிருந்தது. இதுபற்றி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்ட கூறுகையில், படம் தயாரித்து அது தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, அவர் சிறுசிறு வேலைகள் செய்து முயற்சி செய்துள்ளார். ஆனால், பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மொத்தமாக அவர் அனைத்தையும் இழந்துவிட்டதாக கூறுகிறார் என்றுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டே அவரை ஹோம் ஒன்றில் சேர்த்துள்ளார்.