ரம்பாவிற்கு இவ்வளவு அழகான மகளா.? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..
ரம்பாவிற்கு இவ்வளவு அழகான மகளா.? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி போன்ற பலமொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
இவரின் நடிப்பின் மூலமும், அழகின் மூலமும் மக்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். தனது 15 வயதில் சினிமா வாழ்க்கையில் தொடங்கிய ரம்பா, தமிழில் முதன் முதலில் 'த்ரீ' திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதன்பின் உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, சுந்தர புருஷன், தர்மசக்கரம், விஐபி, அடிமை சங்கிலி, ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய், தேசிய கீதம், மின்சார கண்ணா, உன்னருகே நான் இருந்தால், குங்கும பொட்டு கவுண்டர், அழகிய தீயே, சுக்கிரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் ரம்பாவின் மகள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகளைக் குறித்து பெருமையாக உணர்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.