தோளில் கைபோட்டு போட்டோ எடுக்கவந்த ரசிகர்; தொடாதீங்க - கத்தியபடி தப்பிவந்த நடிகை ராதிகா.!
தோளில் கைபோட்டு போட்டோ எடுக்கவந்த ரசிகர்; தொடாதீங்க - கத்தியபடி தப்பிவந்த நடிகை ராதிகா.!
தமிழ் திரையுலகில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
பின்னாட்களில் விஷால், விஜய், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களுக்கு தாயாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் இவர் கால் பதித்து பேராதரவை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வந்த சித்தி 2 சீரியல் நிறைவு பெற்றது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், கோவிலை விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள், பத்திரிகையாளர் என பலரும் போட்டோ எடுத்தனர்.
ராதிகாவும் பொறுமையாக நின்று போட்டோக்கு போஸ் கொடுத்த நிலையில், ஒரு ரசிகர் தோள் மீது கை வைத்து போட்டோ எடுக்க நினைத்துள்ளார். திரும்பி பார்த்து தொடாதீர்கள் என்ற சத்தம் போட்டு ராதிகா அங்கிருந்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.