நான்கு ரூபாய்க்கு சாப்பாடு. அம்மா உணவகத்தை மிஞ்சிய அண்ணா உணவகம்! குவியும் பாராட்டுக்கள்!
Actress roja started new hotel and poor people
1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.
ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சினிமாவை விட்டு விலகிய ரோஜா ஒரு தனியார் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு நடுவாராகவும் செயல்பட்டார். அதுபோக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரோஜா. இதையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கப்படுகிறது. ரோஜாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் வண்ணம் இருக்கின்றனர்.