"கல்யாணம் பண்ணு, குழந்தை பெத்துக்கோன்னு சொல்ல, என் வாழ்க்கையை முடிவு செய்ய அவங்க யாரு?" - 38 வயதாகும் ஜெயம் பட நடிகை கொந்தளிப்பு..!!
என்ன கல்யாணம் பண்ணு, குழந்தை பெத்துக்கோன்னு சொல்றாங்க.. என் வாழ்க்கையை முடிவு செய்ய அவங்க யாரு? - 38 வயதாகும் ஜெயம் பட நடிகை சதா கொந்தளிப்பு..!!
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. இவர் இப்படத்தை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, புலிவேஷம், உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நடுவராக சதா பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு 38 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார். தனது திருமணம் குறித்த அண்மையில் பேசிய சதா, "என்னிடம் பல பேர் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும், குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறி வருகின்றனர்".
என் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்?. திருமணம் செய்யும் 10 ஜோடிகளில் ஐந்து பேர் கூட சந்தோஷமாக இருப்பதில்லை. யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நான் ஏன் நினைக்க வேண்டும்?. மற்றவர்களுக்காக நான் எதற்காக உழைக்க வேண்டும். என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
திருமணம் செய்து கொண்டால் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது. திருமணம் என்ற பெயரில் மற்றவர்களை சார்ந்திருப்பதால் நெருக்கடியையும், அவரையும் தாங்க வேண்டும். ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் எனது சம்பாத்தியத்தை என் கணவர் சார்ந்திருக்க கூடாது" என தெரிவித்துள்ளார்.