தனது முதல் காதல் பற்றிய ரகசியத்தை வெளியே கூறிய ஷகீலா! இவரைத்தான் காதலித்தாராம்!
Actress sakeela talks about her first love
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா முழுவதும் தனது கவர்ச்சியான நடிப்பினால் பிரபலமானவர் நடிகை ஷகீலா. தமிழ் சினிமாவில் சந்தானம், ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவம் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நடித்துள்ளார் ஷகீலா.
கவர்ச்சியில் பெயர்போன ஷகீலா, முதன் முறையாக தனது காதல் அனுபவம் குறித்து பேசியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'சோட்டா மும்பை' என்ற படத்தில் நடித்தாராம் ஷகீலா. அந்த நேரம் பார்த்து அவரது தாயாருக்கு உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.
அந்த நேரம் படத்தின் தயாரிப்பாளர் மணியன்பிள்ள ராஜுவிடம் படத்தில் நான் நடிப்பதற்கான சம்பளத்தை முன்கூட்டியே கேட்டுள்ளார் ஷகீலா. தயாரிப்பாளரும் ஷகீலா கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் மீது காதலில் விழுந்துள்ளார் ஷகீலா.
தனது காதலை ஒரு கடிதத்தில் எழுதி அதை தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த கடிதத்துக்கு இன்றுவரை அவர் பதில் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் ஷகீலா.