கோவிலில் மாலையும் கையுமாய் நடிகை சாக்ஷி அகர்வால்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்... இதுதான் விஷயமா..?
நடிகை ஷாக்ஷி அகர்வால் புது படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாக்ஷி அகர்வால் புது படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க க க போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி. சமீபத்தில் கூட ஆர்யாவின் டெட்டி படத்தில் நடித்திருந்த இவர் அடுத்தாக புரவி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
புரவி படத்தில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதுவரை சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், தற்போது ஹீரோயினாக நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிகர் வித்து நடிப்பில் நடிகை சாக்ஷி அகர்வால் மேலும் ஒரு புது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் கொடைக்கானலில் போடப்பட்ட நிலையில், அந்த பூஜை புகைப்படங்களை சாக்ஷி தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.