அடடா..! அடிக்கிற வெய்யிலுக்கு குளுகுளுனு புகைப்படம் வெளியிட்ட சாக்க்ஷி அகர்வால்.. வைரல் புகைப்படம்..
நடிகை சாக்ஷியின் கொடைக்கானல் குளிர் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சாக்ஷியின் கொடைக்கானல் குளிர் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு அதிக படவாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யாவின் டெட்டி, புரவி போன்ற படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி. புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
மேலும் இவர் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கொடைக்கானலில் படிப்பிடிப்பில் இருக்கும் இவர், அவரது குளு குளு குளிர் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.