அட இவரையும் விட்டுவைக்கலையா.. கோமாளி பட பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி போன்ற படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தற்போது குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து சம்யுக்தா வெளியிட்டுள்ள பதிவில், நண்பர்களே..நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவர்கள் கூறும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டுவர ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.