90ஸ் இளசுகளின் கனவுநாயகி சங்கவியின் மகளை பார்த்தீங்களா! அவரை மாதிரியே இருக்காரே! வைரல் வீடியோ!!
90ஸ் இளசுகளின் கனவுநாயகி சங்கவியின் மகளை பார்த்தீங்களா! அவரை மாதிரியே இருக்காரே! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய்க்கு ஜோடியாக ரசிகன் மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த சங்கவி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். மேலும் சினிமாவிற்கு முழுக்கு போட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். அவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சங்கவி தற்போது தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் அந்தக் குழந்தையும் பார்ப்பதற்கு சங்கவி போலவே கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.