என்னமா இது... என்ன ஆச்சு.. நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள்! வைரல் புகைப்படம்...
நடிகை ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம் வரும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாக இருந்த அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.
நடிப்பு, இசை, பாடல் என பயங்கர பிசியாக இருக்கும் அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது முடியை விரித்தப்படி வித்தியாசமான லுக்கில் உள்ள புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.