அஜித் போல் அசால்ட்டாக சால்ட் அண்ட் பெப்பர் அழகில் சுற்றும் சிம்ரன்! வைரல் புகைப்படம் இதோ.
Actress simran salt and pepper style look
பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஐபி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் சிம்ரன். அஜித்துடன் இவர் நடித்த வாலி திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது.
அதன்பிறகு தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்தார்.
சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அடுத்ததாக மாதவனுக்கு மனைவியாக ராகெட்டரி படத்தில் நடித்துவருகிறார்.
பொதுவாக நடிகைகள் எத்தனை வயதானாலும் மேக்கப் போட்டுகொண்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டு சுற்றுவதுதான் வழக்கம். ஆனால், தற்போது 43 வயதாகும் நடிகை சிம்ரன் தல அஜித் ஸ்டெயிலை பின்பற்றி சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டெயிலில் இருக்கும் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.