நடிகை ஸ்ரீதிவ்யாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
நடிகை ஸ்ரீதிவ்யாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டை, மருது, பென்சில், ஜீவா, ஈட்டி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அதன் பிறகு படவாய்ப்புகள் குறையவே தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் ஸ்ரீதிவ்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீதிவ்யாவின் அக்கா ஸ்ரீ ரம்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீ ரம்யா தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் யமுனா எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.