இதெல்லாம் அஜித்தால் மட்டுமே முடியும்! புகழ்ந்துதள்ளிய பிரபல தமிழ் நடிகை!
Actress sridivya talks about ajith ner konda paarvai first look poster
தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் தல அஜித். பிங்க் படம் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதால் படம் மீதான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நேற்று மாலை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்ரெண்டாக்கினர்.
மேலும் சினிமா பிரபலங்கள் பாலரும் தங்களது கருத்துக்களை பதிவிடுவருகின்றனர். அந்தவகையில் நடிகை ஸ்ரீதிவ்யா, எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஃபஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர், இதுதான் அஜித், மேலும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.