பொது கழிவறை போல் என்னை பயன்படுத்தினர்! தமிழ் நடிகர் மீது புகார் கூறும் ஸ்ரீரெட்டி!
Actress srireddy again started to compliant
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தது பற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தும், யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது, தமிழில் பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தமிழ் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது புகார் கூறி வந்தார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சுந்தர் .சி, நடிகர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரது மீது பாலியல் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார். இதனால் சிறிதுகாலம் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் புகார் தெரிவிக்க தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, என்னை பொது கழிப்பிடம் போல பயன்படுத்தினார். அந்த காயங்கள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் படுக்கையில் படுத்து என்னுடைய பட வாய்ப்பிற்காக தான். அவை அனைத்தும் என்னுடைய கொடுமையான காலம். தற்போது ஒரு தமிழ் ஹீரோ ஒருவர் என்னுடைய கேரியரை நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவருக்கு தெலுகு சினிமா வட்டாரத்தில் அதிக நெருக்கம் இருக்கிறது. அவரும் ஒரு பெண் விரும்பி தான். எனக்கு இந்த பூமியில் இடமே இல்லையா? என்று பதிவிட்டுள்ளார்.