சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஒரு படம் கூட நடிக்காதது ஏன்?? மனம் நொந்து உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஒரு படம் கூட நடிக்காதது ஏன்?? மனம் நொந்து உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!!
1991ம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 80'ஸ் மற்றும் 90'ஸ் காலகட்டத்தில் கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
நடிகை சுகன்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மட்டும் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இதுகுறித்து நடிகை சுகன்யா அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது, 15 ஆண்டுகளாக பிஸியாக நடித்த எனக்கு நடிகர் ரஜினியுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள விமான நிலையம் சென்றபோது, அங்கு வந்த இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் என்னை திடீரென திட்டினார்.
ஏன் நீங்க ரஜினி படத்தில் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டீங்க என கேட்டார். அதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அவரிடம் விவரம் கேட்டபோது, முத்து படத்தில் மீனாவின் கேரக்டரில் நடிக்க முதலில் தன்னைதான் செலக்ட் செய்துள்ளனர் என தெரிய வந்தது. பின் அவர் எனக்கு அதுகுறித்து தற்போது தான் தெரியும் என கூறி மிகவும் வருத்தப்பட்டாராம்.