90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சுவலட்சுமி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் இதோ!
Actress suvalakshmi current status and photo
90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்து மிகவும் பிரபலமாக இருந்த ஒருசில நடிகைகளில் ஒருவர் அஜித்தின் ஆசை படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவு நாயகியான நடிகை சுவலஷ்மி. தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பெங்காலியில் வெளியான ‘ஓட்டுறான் ‘ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னரே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அஜித்துடன் ஆசை படத்தை அடுத்து, தளபதி விஜயுடனும் லவ் டு டே படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். லவ் டு டே படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. அதன்பின்னர் கார்த்திக், முரளி, பிரபு என பல்வேறு நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார் சுவலக்ஷ்மி.
அதன்பின்னர் புது முக நடிகைகளின் வரவு, வயதான காரணம் போன்ற பல காரணங்களால் சினிமாவில் இவரது வாய்ப்பு குறைந்தது. இதனால் சின்னத்திரையில் சூலம் என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் திருமணம் முடிந்து கலிபோர்னியாவில் செட்டிலானார் சுவலஷ்மி.
2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்திற்கு தமிழ்நாடு மாநில விருதினை பெற்றார். இருப்பினும் அந்த படம் தான் அவரின் கடைசி படமாக அமைந்தது. தற்போது இவர் என்ன செய்கின்றார், எங்கு உள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.