90களில் கொடிகட்டி பரந்த நடிகை சொர்ணமால்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
Actress swarna malya latest unseen photos goes viral
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் ஸ்வர்ணமால்யா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற தொடர் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் பின்னர் சினிமாவில் நடிக்கவும் செய்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற படத்தில் படத்தின் நாயகி ஷாலினிக்கு அக்காவாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளியப்படுத்தினார் ஸ்வர்ணமால்யா. அதன்பின்னர் எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களில் நடித்த இவர் சில காலத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
பின்னர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு ஒருசில சீரியல் தொடர்களில் நடித்துவந்த இவர் தற்போது முழுவதுமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். 90 ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவரான இவரது தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது என வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதோ அவரது தற்போதைய புகைப்படங்கள்.