பல கோடி மதிப்பில் புது சொகுசு வீடு வாங்கிய நடிகை டாப்ஸி – எத்தனை கோடி தெரியுமா?
Actress taapsee pannu bought new house for six crores
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை டாப்ஸி. தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.
அதன்பின்னர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஆரம்பம் படத்திலும், ஜீவாவுக்கு ஜோடியாக வந்தான் வென்றான் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை டாப்ஸி. அதனை தொடர்ந்து வை ராஜா வை, காஞ்சனா 2 போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி திரை உலகிற்கு சென்றுவிட்டார்.
நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த வெற்றியால் இப்போது டாப்ஸி மும்பையில் ஒரு புதிய சொகுசு வீடு ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் மொத்த விலை ரூ. 6 கோடி இருக்கும் என்கின்றனர்.