எனக்கு பெரிய ஆசை எல்லாம் கிடையாது, அந்த முக்கிய இரண்டு நடிகர்களுடன் நடித்தாலே போதும்!! பிரபல நடிகை ஓப்பன் டாக்!!
actress talk about thala and vijay sethubathi
நடிகை சிருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவர் ‘சத்ரு’ என்ற படத்தில் நடிகர் கதிருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருபாடலுக்கு 20 க்கும் மேற்பட்ட ஆடை மாற்றவேண்டியிருந்தது இந்தநிலையில், அப்போது ஆடை மாற்றுவதற்கு கேரவன் இல்லாததால் கடற்கரையில் உள்ள பொது கழிப்பிடத்தில் வைத்து தன்னுடைய டிரஸை மாற்றி படக்குழுவினர் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியை நன்றாக கற்று கொண்டேன்.
தமிழ் நடிகர்களில் எனக்கு ‘தல’ அஜித், ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இவர்களுடன் இணைந்து நடிக்க ஆசை. எனக்கு நூறு படங்கள் எல்லாம் வேண்டாம், பத்து நல்ல படங்களில் நடித்தாலே போதும். தமிழ் மக்களின் ஆதரவு என்றும் தேவை என்று கூறியுள்ளார்.