யாரும் பதற வேண்டாம்.! அதையும் செய்ய வேண்டாம்.! ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கூல் அட்வைஸ்!! எதற்கு தெரியுமா??
யாரும் பதற வேண்டாம்.! அதையும் செய்ய வேண்டாம்.! ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கூல் அட்வைஸ்!! எதற்கு தெரியுமா??
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை தமன்னா பாலிவுட் வெப் சீரிஸிலும் அதிகளவு கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அவர் நடித்திருந்த ஜீ கர்தா என்ற பாலிவுட் வெப்தொடர் அண்மையில் வெளிவந்தது. அதில் நடிகை தமன்னா மிகவும் கிளாமராகவும், ஆபாசமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல மோசமான விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில் அவர் கதைக்கு தேவைப்பட்டதால்தான் அவ்வாறு நடித்ததாக விளக்கம் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள மற்றுமொரு வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ் 2. இந்த தொடர் வருகிற 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமன்னா பேசிய பிரமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் தமன்னா, இந்த தொடரை பார்த்து கொண்டிருக்கும் போது உங்களது அறைக்கு யாரேனும் வந்தால் நீங்கள் பதற்றமடைய தேவையில்லை. மேலும் தொடரை பாதியிலேயே நிறுத்தவும் வேண்டாம். இதில் காமத்தை விட காதல், ஆக்ஷன் ஏராளமாக உள்ளது. மேலும் இந்த வெப் சீரிசில் அம்மாவின் காதல், பாட்டியின் காதல், முன்னாள் காதல், வேலைக்காரியின் காதல் என நிறைய இருக்கிறது. அதனால் பார்த்து ஹேப்பியாக இருங்கள் என கூறியுள்ளார்.