தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை தனது நாய்க்கு கொடுத்த த்ரிஷா! வைரலாகும் புகைப்படம்!
Actress thrisha dressed her dog in 96 movie style
தமிழ் சினிமாவில் இன்றுவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா, கமல் என அணைத்து தமிழ் சினிமா பிரபலங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை த்ரிஷா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் அவருக்கு ஸ்பெஷல் கொடுத்த அந்த மஞ்சள் கலர் சுடிதார் தான். இந்த வருட தீபாவளிக்கு அனைத்து கடைகளிலும் சேல்ஸ்க்கு வந்துவிட்டது. பலரும் அதை வாங்கி அணிந்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திரிஷா தான் ஆசையாக வளர்த்து வரும் செல்லப்பிராணி நாய்க்கு அதே போல மஞ்சள் கலர் காஸ்ட்யூம் அணிவித்துள்ளார். மேலும் அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் த்ரிஷா!