நடிகை திரிஷா அரசியலில் குதிக்கிறாரா?.. கோபத்துடன் திரிஷாவின் தாய் பரபரப்பு பதில்.!
நடிகை திரிஷா அரசியலில் குதிக்கிறாரா?.. கோபத்துடன் திரிஷாவின் தாய் பரபரப்பு பதில்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை திரிஷா. இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், திரிஷா அரசியலில் குதிக்கப்போவதாக நேற்று தகவல்கள் வந்தன.
மேலும் அவர் ஒரு தேசிய கட்சியில் இணையபோவதாகவும் தகவல் வந்தது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததால் திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக நடிகை திரிஷாவின் அம்மா தெரிவிக்கையில், "இது முற்றிலும் வதந்தி என்று கோபமாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற வதந்திகள் எங்கிருந்து பரவுகிறது என தெரியவில்லை. எனது மகள் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். விரைவில் அவரது அடுத்தடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வரும்" என்று கூறியுள்ளார்.