நடிகை திரிஷாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
நடிகை திரிஷாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களோடு ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 40 வயதாகும் திரிஷா தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தற்போது திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது திரிஷாவின் முழு சொத்து மதிப்பு 70 முதல் 80 கோடி வரை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.