ரசிகர்களுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்த திரிஷா: காரணம் என்ன?.!
ரசிகர்களுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்த திரிஷா: காரணம் என்ன?.!
கடந்த ஆண்டு படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை திரிஷா, பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். இறுதியாக நீண்ட ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிகர் விஜயுடன் இணைந்து நடித்தார்.
லியோ திரைப்படம் நல்ல வெற்றி அடைந்த நிலையில், அடுத்தபடியாக விடாமுயற்சி படத்தில் மீண்டும் அஜித்துடன் நடிக்கவிருப்பதாக தெரியவருகிறது. இதனை உறுதிசெய்யும் பொருட்டு இருவரும் சென்னை விமான நிலையத்தில் ஒன்றாக படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு அமீரின் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சூர்யா, திரிஷா உட்பட பலரின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படம் 13 டிசம்பர் 2022 அன்று வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. இப்படத்திலேயே திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். இதனால், இன்று ரசிகர்கள் திரிஷாவை பாராட்டி பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், நடிகை திரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த நாளை எனக்கு சிறப்பானதாக மாற்றிய உங்களுக்கு நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த தொடர் அன்பினாலே, நான் இன்று இங்கு இருக்கிறேன். உங்களின் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவராக நான் இருப்பேன்" என கூறியுள்ளார்.