16 வயது நடிகைக்கு லிப்கிஸ் அடிச்ச நீங்கலாம் இதை பத்தி பேசலாமா?? கமலை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!!
16 வயது நடிகைக்கு லிப்கிஸ் அடிச்ச நீங்கலாம் இதை பத்தி பேசலாமா?? கமலை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!!
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக, சூடுபறக்க சென்று கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரதீப்.
பரபரப்பு போட்டியாளராக திகழ்ந்த இவர் மீது சக பெண் போட்டியாளர்கள் தகாத வார்த்தை பேசுகிறார், தூங்கவே பயமாக உள்ளது, டபுள் மீனிங்கில் பேசுகிறார் எனத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து, பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு காரணமாக அவரை வெளியேற்றுவதாக அறிவித்தார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக போர்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் மனைவி ஹேமா மாலினி இது குறித்து சரமரியாக கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர், கமல்ஹாசன் புன்னகை மன்னன் படத்தில் நடித்த போது ஹீரோயின், 16 ரேகாவை அவரிடம் சொல்லாமலேயே லிப்கிஸ் அடித்ததாக பரபரப்பாக தகவல்கள் பரவி வருகிறது. இவரெல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? அவர் நடித்த ஏராளமான படங்களில் லிப்லாக் சீன் இல்லாமல் இருக்காது, அவர் தற்போது பெண்களுக்காக, பெண்களின் பாதுகாப்புக்காக என பேசுவது ஏன்? என புரியவில்லை என்று காட்டமாக பேசியுள்ளார்.