ஹிந்தியில் ரீமேக்காகும் ஆடை! ஆடையில்லாமல் அமலாபாலாக நடிக்கபோவது யார் தெரியுமா?
Adai movie remake in hindi
2019-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை. இப்படத்தில் முக்கிய ஹீரோயினாக அமலாபால் நடித்திருந்தார். மேலும் அவர்களுடன் விவேக் பிரசன்னா, வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆடையில்லாமல் ஓரிடத்தில் மாட்டிக் கொள்ளும் பெண் அங்கிருந்து எப்படி தப்பித்து செல்கிறார் என்ற கதையை மையமாகக் கொண்ட ஆடை திரைப்படத்தில் நடிகை அமலாபால் புகைபிடித்தல் மற்றும் நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தார்.
இதனால் பெரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனாலும் படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றது. அதனைத்தொடர்ந்து ஆடை திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ஆடை திரைப்பட இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஹிந்தியில் ரீமேக்காகும் ஆடை திரைப்படத்தில், அமலாபாலின் போல்டான கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.