×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ஆதிக் ரவிச்சந்திரன்!" நெருங்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு!

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த ஆதிக் ரவிச்சந்திரன்! நெருங்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு!

Advertisement

2015ம் ஆண்டு "த்ரிஷா இல்லனா நயன்தாரா" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன், காதலைத் தேடி நித்யானந்தா, விர்ஜின் மாப்பிள்ளை, பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் கடந்த சில மாதங்களாக நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவைப் காதலித்து வந்ததாகவும், டிசம்பரில் திருமணம் என்றும் தகவல் வெளியாகியது.

திருமணம் குறித்து வேறு எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது டிசம்பர் 15ம் தேதி இன்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இத்திருமணத்தில் நடிகர் விஷால், மணிரத்னம், சுஹாசினி, பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மிக நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும், மற்ற திரைப்பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#prabhu #Adhik #director #Kollywood #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story