அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்? வெளியான அசத்தல் தகவல்!
அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அதர்வா. இவர் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வித்தியாசமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான வர்த்தகம் என்ற இணைய வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இவர் தனல், அட்ரஸ், நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.