எம்ஜிஆர் மாதிரியே இருக்கும் இந்த நபர் யார்.. வைரலாகும் புகைப்படம்.?
எம்ஜிஆர் மாதிரியே இருக்கும் இந்த நபர் யார்.. வைரலாகும் புகைப்படம்.?
பொதுவாக மனிதனுக்கும், ஒரு இயந்திரத்துக்கும் உள்ள வேறுபாடு தான் படைப்பாக்கத் திறன் ஆகும். மனிதர்களிடம் மட்டுமே இருக்கும் இந்த படைப்பாகத் திறன் இயந்திரத்தின் மூலம் சாத்தியமானது தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ தொழில்நுட்பம்.
கணினி அறிவியலின் பரந்த அறிவாக இருக்கும் இந்த ஏ ஐ தொழில்நுட்பம், பல்வேறு துன்னறிவுத் திறன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் இருக்கும். அதுபோலவே தான் இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்கள் வருகின்றன.
சினிமாவிலும் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆச்சர்யமூட்டும் விஷயங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில், ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் தமன்னாவுக்கு பதிலாக சிம்ரனை ஆட வைத்தும், மறைந்த பாடகர் எஸ்.பி.பி யின் குரலை ஒரு பாடலுக்கு பயன்படுத்தியும் ஆச்சர்யமூட்டியுள்ளனர்.
மேலும் சிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் படத்தில் மறைந்த புனித் ராஜ்குமாரை கொண்டு வந்தது என நிறைய சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது. அந்தவகையில் தற்போது எம். ஜி. ஆர் "கண் போன போக்கிலே கால் போகலாமா" பாடலை பாடுவது போன்ற வீடியோ உருவாக்கி வைரலாகி வருகின்றனர்