முன்னழகை எடுப்பாக காட்டி லிப்டுக்குள் நுழையும் ராஷ்மிகா?; அதிர்ச்சி வீடியோவின் பகீர் உண்மை.. வர்மன் பாணியில் ட்விஸ்ட்.!
முன்னழகை எடுப்பாக காட்டி லிப்டுக்குள் நுழையும் ரஷ்மிகா?; அதிர்ச்சி வீடியோவின் பகீர் உண்மை.. வர்மன் பாணியில் ட்விஸ்ட்.!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகில் அறிமுகம் செய்யப்படும் அதே வேளையில், அதனை வைத்து மக்களை ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து அபரீதமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பிறரின் குரல் பாடல்களை தயாரிப்பது, பிறரின் முகத்தை மாற்றி வைத்து வீடியோ தயாரிப்பது என தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிலரால் தவறான பாதையில் உபயோகம் செய்யப்படுகின்றன.
ரீல்ஸ் வீடியோக்கள் என்பது தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் மோகத்திற்கு மக்கள் அடிமையாகியுள்ளதை தனக்கு சாதகமாகும் கும்பல், அவர்களின் வீடியோவை பார்க்க பல்வேறு வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண்மணி ஒருவர் தனது முன்னழகை காண்பிக்கும் விதமாக எடுத்த வீடியோவில், பார்வையாளர்களை பெற நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஒருநொடியளவில் பயன்படுத்தி, பின் தனது முகத்தை கொண்டு வந்து தொழில்நுட்ப உதவியுடன் வீடியோ தயாரித்து பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகரின் வசனத்தின் பாணியில், ராஷ்மிகா வருவதுபோல தோன்றியது போலியானது (Fake). இந்த வீடியோ வைரலாகியதைத்தொடர்ந்து, அவரின் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது. விடியோவை தெளிவாக உற்றுநோக்கினால், ஒன்று முதல் 2 நொடிகளுக்கு இடைப்பட்ட வினாடியில் முகம் ராஷ்மிகா போல தோன்றி மாறும்.
இவை எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சி சுயநலமாகும்போது அது பலரின் வாழ்க்கையை தடம்புரட்டிபோடப்போகிறது என்பது அப்பட்டமாக இதன் வாயிலாக உறுதியாகிறது.