நயன்தாரா ரசிகர்களுக்கு குஷியான செய்தி! இனி நீங்க அடிக்கடி பார்க்கலாம்!!
airaa movie satelite rights acquired by vijay tv
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இப்படத்தில் அவர் பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், கலைப்புலி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
நிலையில் இப்படம் சென்னையில்சில திரையரங்கில் அதிகாலை காட்சியில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரா படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.
மேலும் விஜய் டிவியில் ஒரே படத்தை மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டே இருப்பதால், நயன்தாரா ரசிகர்கள் அடிக்கடி ஐரா படத்தை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.