இணையத்தை கலக்கும் ஐரா நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள்!
Airaa nayanthara lovely pics
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் ஐரா படததின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாரா நடிப்பில், மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி உள்ள ஐரா படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திகில் நிறைந்த கதை, வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாரா, ஹீரோக்களுக்கு இணையான இரட்டை வேடம் என வெயிட் காட்டும் நயன்தாராவின் ஐரா படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.