"அவர் மறக்கவில்லை., நீங்கள் நினைக்கவில்லை"?.. கணவரை பிரிந்ததும் அனைத்தையும் மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
அவர் மறக்கவில்லை., நீங்கள் நினைக்கவில்லை?.. கணவரை பிரிந்ததும் அனைத்தையும் மறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களது பிரிவினை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். ரசிகர்கள் பலரும் தம்பதியை சேர சொல்லி வற்புறுத்தியும், அவர்கள் நமது வாழ்க்கைக்கு பிரிவே சரியானது என்ற முடிவை எடுத்தனர்.
பின்னர் இருவரும் தங்களது பாதையில் தனித்தனியே பயணிக்க தொடங்கிய நிலையில், நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க சென்றதை தொடர்ந்து, சமீபத்தில் அவரது "தி கிரே மென்" படமானது வெளியானது. மேலும் கடைசியாக ஐஸ்வர்யா இயக்கத்தில் பயணி எனும் ஆல்பம் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.
அதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்து, "எனது தோழி ஐஸ்வர்யா அவர்களின் இந்த ஆல்பம் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 39 ஆவது பிறந்தநாளை நேற்று கோலாகலமாக கொண்டாடிய நிலையில், அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் வாழ்த்து கூறவே இல்லை. இதனை கண்ட ரசிகர்கள் பலரும், "உங்களது ஆல்பம் பாடலுக்கு அவர் மறக்காமல் வாழ்த்து கூறினார். ஆனால் நீங்கள் மட்டும் ஏன் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவில்லை?. அதை எப்படி மறந்தீர்கள்?" என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.