×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சில நேரங்களில்.. இதுதான் தேவை.! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா! குவியும் லைக்ஸ்!!

சில நேரங்களில்.. இதுதான் தேவை.! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா! குவியும் லைக்ஸ்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிபடங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். பின்னர் இருவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற இதன் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்டார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளனர். இருவரையும் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், சில நேரங்களில்.. உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவாது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya #Sons #hug
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story