சாதாரண காய்ச்சல் என மருத்துவமனைக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படியொரு சோதனையா? வெளியான அதிர்ச்சி தகவல்!!
aishwarya talk about her hospital experience

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடித்த கனா மற்றும் சாமி 2 படங்களும் பெருமளவில் வெற்றி பெற்றது.
மேலும் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடிக்க இவரை தேடி வாய்ப்புகள் வந்தன. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மெய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது கூறியதாவது, ஒருநாள் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தியுள்ளேன்
மருத்துவர்களின் கட்டாயத்தின் அடிப்படையில் பல தேவையற்ற பரிசோதனைகளை செய்தேன். அதனால் செலவும் அதிகமானது. மருத்துவத்துறையில் உள்ள இதுபோன்ற முறைகேடுகள் ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.