விவாகரத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா.?! மகளின் செயலை கண்டித்த ரஜினிகாந்த்.?!
விவாகரத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா... மகளின் செயலை கண்டித்த ரஜினிகாந்த்...! கிசு கிசுக்கும் கோலிவுட் வட்டாரம்..!?
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இத்தகைய நிலையில், லால் சலாம் படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து ஐஸ்வர்யா பாடவுள்ளார். எனவே லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாடல் ஒத்திகைக்காக அனிருத் ஸ்டுடியோவிற்கு சென்று அங்கேயே தங்கிவிடுகிறாராம்.
இதனையறிந்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் இந்த செயலுக்காக கண்டித்திருக்கிறார். அனிருத், ரஜினியின் குடும்பத்திற்கு நெருங்கிய சொந்தம் என்றாலும் அங்கு தங்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ரஜனிகாந்த். தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தானது சமூக வலைத்தளங்களின் மூலம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இது போன்ற நிலையில் ஐஸ்வர்யாவின் செயல், அவரது தந்தையான ரஜினிகாந்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நெருங்கிய சினிமா நண்பர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.