60 வது படத்தில் தல அஜித் என்னவாக நடிக்கிறார் தெரியுமா? குஷியில் தல ரசிகர்கள்!
ajith 60'th movie
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது தல அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து சூப்பர் ஹிட் ஆன இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் இயக்குகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும் எனவும், இந்த படத்தில் அஜித், அஜித்தாகவே இருப்பார். படத்தில் கார் பந்தய காட்சி, விளையாட்டு என்று அவருக்கு பிடித்தமான அனைத்தும் இருக்கும் என தயாரிப்பாளர் போனிகபூர் கூறியுள்ளார்.