×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.." 25 ஆண்டு காதலை கொண்டாடிய தல அஜித் - ஷாலினி தம்பதி.!

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.. 25 ஆண்டு காதலை கொண்டாடிய தல அஜித் - ஷாலினி தம்பதி.!

Advertisement

தமிழில் அமராவதி  படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாலினி. இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தின் மூலம் அறிமுகமாகி இணைந்து நடித்தனர். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார். இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்.

இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது. அந்தப் படப்பிடிப்பில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து அது திருமணமாக முடிந்தது..மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரிசார்ட்டில்  நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வழங்கி  அஜித் மற்றும் ஷாலினி தங்களது 25 வது வருட திருமண நிகழ்வை கொண்டாடி இருக்கின்றனர். அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் இப்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

தமிழ் பட டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், ஷாலினி திருமணத்திற்கு பிறகு இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilcinema #Kollywood #Ajith Kumar #Shalini #25th Anniversary Celebration
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story