17 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்! செம மாஸ் தகவல்.
Ajith and vadivelu joining after 17 years in valimai movie
இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்தவுறுகிறார் தல அஜித். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகி யார், மற்ற கதாபாத்திரங்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான ராஜா படத்தில் வடிவேலு அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.
அந்த படத்தில் அஜித் - வடிவேலு இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ராஜா படத்திற்கு பிறகு சுமார் 17 வருடங்கள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது வலிமை படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு அஜித் - வடிவேலு இருவரும் இணைவது குறிப்பிடத்தக்கது.