விமான நிலையத்தில் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்! ஏன்? என்னதான் நடந்தது? நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!
விமான நிலையத்தில் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்! ஏன்? என்னதான் நடந்தது? நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் அஜித். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் பெரும் திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடுவர்.
நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஹெச். வினோத்துடன் கூட்டணியில் இணைந்து AK61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். AK61 படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவமொன்று ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
நடிகர் அஜித் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெளிநாடு செல்வதற்காக அவசரஅவசரமாக வந்துள்ளார். அவரைக் கண்ட ரசிகை ஒருவர் அவரிடம் செல்பி எடுக்க கேட்டுள்ளார். அதற்கு அஜித் டைம் ஆகிடுச்சு.. மன்னித்து விடுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளாராம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..