என்னதான் தல ரசிகனாக இருந்தாலும் இப்படியா செய்வது! வெறித்தனமான தல ரசிகனின் செயலைக் கண்டு வியந்து போன தல ரசிகர்கள்.
Ajith fan viran
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகப்படியான ரசிகர் பட்டாளமே உள்ளது. தல அஜித் நடித்து வெளியாகும் முதல் நாள் காட்சிகளை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றால் திரையரங்கமே அதிரும் அளவிற்கு விசில் சத்தம் இருக்கும்.
தல அஜித்துக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர். மேலும், இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் தீவிர தல ரசிகரான மதுரையை சேர்ந்த வீரன்-ஜோதி லெட்சுமி தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு தல அஜித் பெயரை வைக்க வேண்டும் என எண்ணியுள்ளார். ஆனால் அவர்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையான நிலையில் தல அஜித் பெயரை மையப்படுத்தி "அஜிதா" என பெயர் வைத்துள்ளனர்.
அதன் பிறகு அவர்களுக்கு இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியான பெற்றோர் அவனுக்கு தல அஜித் என பெயர் வைத்தது மட்டுமின்றி அவரது பெயரிலே தன்னுடைய குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி பள்ளியில் சேர்த்துள்ளதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கில் கொண்டாடி வருகின்றனர். ‘தல அஜித்’ என்ற அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர்போன்ற சமூக வலைதளங்கில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.