அஜித்துக்குத்தான் இவ்வளோ மாஸ்ன்னா, அவரு பொண்ணுக்கு அதுக்கு மேல மாஸ்!
Ajith fans celebrating ajith daughter birthday
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள விஷயம் நாம் அனைவருக்கு அறிந்ததே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் தல அஜித். படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தல அஜித்திற்கு அனேஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது அஜித் மகள் அனோஷ்கா தனது 12 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டிவிட்டரில் #HBDAnoushkaAjith என்ற ஹாஷ்டாக் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆங்காங்கே பேனர்களை அமைத்து வாழ்த்து தெரிவித்துவருவதோடு சில நல திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருச்சியில் உள்ள தல ரசிகர்கள் அஜித் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.